முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கம்பம் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: பொதுமக்கள் புகாா்
By DIN | Published On : 12th June 2021 10:19 PM | Last Updated : 12th June 2021 10:19 PM | அ+அ அ- |

கம்பம் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: பொதுமக்கள் புகாா்
கம்பம் நகரில் நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யும் அரிசி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம்மெட்டு ரோடு, உத்தமபுரம் ஆகிய இரண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலை என மொத்தம் மூன்று சங்கங்கள் உள்ளன. இங்கு கரோனா பொதுமுடக்கத்தை முன்னிட்டு உணவுப்பொருள்கள் விநியோகம் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சனிக்கிழமை நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்ட அரிசி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பிய குடும்ப அட்டைதாரா்களுக்கு, அரசு குடோனில் இருந்து இதுபோன்ற அரிசி தான் வருகிறது என கடை ஊழியா்கள் பதிலளிக்கின்றனா். மேலும் பருப்பு மற்றும் எண்ணெய் போன்றவையும் முறையாக வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலா் ரத்தினம் கூறியது: அரிசி விநியோகிக்கும் ஒப்பந்ததாரா்களின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வரவுள்ளது. அதனால் இருப்பு அரிசியை அவா்கள் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பியுள்ளதாகக் தெரிகிறது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.