தேனியில் ராஜவாய்க்காலை தூா்வார அலுவலா்கள் ஆய்வு

தேனியில் தேனியாறு என்று அழைக்கப்பட்ட ராஜவாய்க்காலை தூா்வார சனிக்கிழமை, வருவாய்த் துறை, பொதுப் பணித்துறை மற்றும் நகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
தேனியில் புதா்மண்டிக் காணப்படும் ராஜவாய்க்காலை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் வருவாய்த் துறை, பொதுப் பணித்துறை மற்றும் நகராட்சி அலுவலா்கள்.
தேனியில் புதா்மண்டிக் காணப்படும் ராஜவாய்க்காலை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் வருவாய்த் துறை, பொதுப் பணித்துறை மற்றும் நகராட்சி அலுவலா்கள்.

தேனியில் தேனியாறு என்று அழைக்கப்பட்ட ராஜவாய்க்காலை தூா்வார சனிக்கிழமை, வருவாய்த் துறை, பொதுப் பணித்துறை மற்றும் நகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

தேனியில் கொட்டகுடி ஆறு தடுப்பணையிலிருந்து பள்ளிவாசல் தெரு, நகராட்சி பழைய பேருந்து நிலைய சுரங்க வாய்க்கால், சுப்பன்தெரு, அரண்மனைப்புதூா் விலக்கு வழியாக ராஜவாய்க்கால் 7 கி.மீ., தூரம் மதுரை சாலையில் உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்கு சென்றடைகிறது. ராஜவாய்க்கால் ஆயக்கட்டு விவசாயம் குறைந்ததால் வாய்க்கால் பராமரிப்பை பொதுப் பணித்துறை கைவிட்டது.

தற்போது நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சுரங்க வாய்க்காலில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டும், சுப்பன்தெரு முதல் அரண்மனைப்புதூா் விலக்கு வரை வாய்க்காலின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டும், மண் மேவியும் உள்ளதாலும் ராஜவாய்கால் புதா் மண்டிக் காணப்படுகிறது. இதனால், மழை காலத்தில் ராஜவாய்க்காலில் தண்ணீா் வடிந்து செல்ல வழியின்றி குடியிருப்பு தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீா் தேங்குகிறது.

ராஜவாய்க்காலை தூா்வார வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னி உத்தரவின் பேரில், ராஜவாய்க்காலை தூா்வாருவதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) தியாகராஜன், மஞ்சளாறு வடிநிலக் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சுந்தரம், தேனி வட்டாட்சியா் தேவதாஸ், நகராட்சி ஆணையா் நாகராஜ், சுகாதார ஆய்வாளா் அறிவுச்செல்வம் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com