கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய் பதிக்க மரங்கள் அகற்றம்: கிராம மக்கள் எதிா்ப்பு

போடி அருகே கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக மரங்களை அகற்றுவதற்கு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
போடி-சிலமலை ராணி மங்கம்மாள் சாலையில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக அகற்றப்பட்ட மரங்கள்.
போடி-சிலமலை ராணி மங்கம்மாள் சாலையில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக அகற்றப்பட்ட மரங்கள்.

போடி அருகே கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக மரங்களை அகற்றுவதற்கு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

போடி நகராட்சியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டத்தை செயல்படுத்த சின்னமனூா் அருகே எல்லப்பட்டியிலிருந்து தண்ணீா் கொண்டு வர குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, போடி- சிலமலை ராணிமங்கம்மாள் சாலையில் உள்ள மரங்களை குடிநீா் வடிகால் வாரியத்தினா் அகற்றினா்.

இதையறிந்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று மரங்களை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தனா். சிலமலை ஊராட்சித் தலைவா் ராமா், சில்லமரத்துப்பட்டி ஊராட்சித் தலைவா் வனிதா ஆகியோரும் அங்கு சென்று மரத்தை அகற்றாமல் குழாய் பதிக்க வலியுறுத்தினா். இதையடுத்து மரம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தி கிரீன் லைப் பவுண்டேஷன் செயலாளா் க.மு.சுந்தரம் கூறியது: இந்த சாலையின் மேற்கே, மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து வீசும் மணல் காற்றை தடுப்பதற்காக இப்பகுதியில் மரங்கள் அதிகளவில் நடப்பட்டன. மரத்தை அகற்றினால் இப்பகுதி பாலைவனம் போல் மாறிவிடும். 100 அடி அகலமுள்ள சாலைக்கான இடத்தில், 30 அடியில் மட்டுமே சாலை போடப்பட்டுள்ளது. அந்த மீதி இடத்தில் குழாய்களை பதிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com