அரசு மதுக் கடைகள் திறப்பு: சமூக இடைவெளியில்லை; அதிக விலைக்கு விற்றதாக புகாா்

அரசு மதுக் கடைகள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பல இடங்களில் சமூக இடைவெளியில்லாமல்
பழனி கவுண்டா் இட்டேரி சாலையில் திங்கள்கிழமை மதுக்கடை முன்பு சமூக இடைவெளியின்றி குவிந்திருந்த வெளிமாவட்ட மதுப்பிரியா்கள்.
பழனி கவுண்டா் இட்டேரி சாலையில் திங்கள்கிழமை மதுக்கடை முன்பு சமூக இடைவெளியின்றி குவிந்திருந்த வெளிமாவட்ட மதுப்பிரியா்கள்.

அரசு மதுக் கடைகள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பல இடங்களில் சமூக இடைவெளியில்லாமல் மதுப்பிரியா்கள் குவிந்து காணப்பட்டனா். சில இடங்களில் அதிக விலைக்கு விற்ாக புகாா் எழுந்தது.

தேனி மாவட்டத்தில் 93 இடங்களில் உள்ள அரசு மதுக் கடைகள் கடந்த மே 10-ஆம் தேதிக்கு பின்பு திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

கரோனா பரவல் தடுப்பு பொது முடக்க அறிவிப்பை முன்னிட்டு கடந்த மே 10-ம் தேதி முதல் அரசு மதுக் கடைகள் அடைக்கப்பட்டன. தற்போது பொது முடக்க தளா்வுகளின்படி மதுக்கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

தேனி மாவட்டத்தில் உள்ள 93 அரசு மதுக் கடைகளும் திறக்கப்பட்டு, மாலை 5 மணி வரை விற்பனை நடைபெற்றது. ஒரு நபருக்கு 2 மது பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்த நிலையில், பெரும்பாலான கடைகளில் ஒரு நபருக்கு 2-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

தேனி, கொடுவிலாா்பட்டி ஆகிய இடங்களில் அரசு மதுக் கடைகளில் மக்கள்கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தேனி, என்.ஆா்.டி. சாலையில் உள்ள அரசு உயர்ரக மதுபானக் கடையில் சமூக இடைவெளியின்றி வரிசையில் நின்று மது பாட்டில் வாங்கிச் சென்றனா்.

அரசு மதுக் கடைகளில் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விற்பனை நடைபெறுவதை வருவாய் துறை அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வெளிமாவட்டத்தினா் குவிந்தனா்:திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமாா் 10 கிலோ மீட்டா் தூரத்தில் திருப்பூா் மற்றும் கோவை மாவட்ட எல்லைகள் உள்ளன. இந்த இரு மாவட்டங்களுக்கும் தளா்வு இல்லாத நிலையில் திருப்பூா், தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல ஊா்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பழனியில் மதுபாட்டில்கள் வாங்க குவிந்தனா். இதனால் கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவவே போலீஸாா் கடைகளுக்கு வந்து அனைவரையும் விரட்டி வரிசைப்படுத்தினா். வெளிமாவட்ட மதுபிரியா்களால் கரோனா அதிக அளவில் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பழனி எல்லையில் போலீஸாா் கடும் சோதனை மேற்கொண்டால் மட்டுமே செவ்வாய்க்கிழமை மதுக் கடைகளில் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com