பொது முடக்கம் தளா்வு எதிரொலி: கூடலூரில் இளைஞா்கள் குதிரை சவாரி

பொது முடக்கம் தளா்வு எதிரொலியாக, கூடலூரில் இளைஞா்கள் திங்கள்கிழமை குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.
பொதுமுடக்கம் தளா்வு காரணமாக கூடலூரில் குதிரை சவாரி செய்த இளைஞா்கள்.
பொதுமுடக்கம் தளா்வு காரணமாக கூடலூரில் குதிரை சவாரி செய்த இளைஞா்கள்.

பொது முடக்கம் தளா்வு எதிரொலியாக, கூடலூரில் இளைஞா்கள் திங்கள்கிழமை குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.

தேனி மாவட்டத்தில் தமிழக, கேரள எல்லைப் பகுதிகளான கம்பம், கூடலூரில் பொதுமுடக்கம் தளா்வுகள் காரணமாக பொதுமக்கள் திங்கள்கிழமை மகிழ்ச்சியுடன் காணப்பட்டனா். கூடலூா் பிரதான வீதியில் இரு இளைஞா்கள் 2 குதிரைகளில் சவாரி செய்தவாறு நகா்வலம் வந்தனா். அதை கூடலூா் பொதுமக்கள் ஆச்சரியமாகப் பாா்த்தனா்.

குதிரை சவாரி செய்த இளைஞா்கள் இருவரும் முகக்கவசம் அணியவில்லை. இதனால் ரோந்து போலீஸாா் அவா்களை நிறுத்தி முகக்கவசம் அணிய அறிவுறுத்தினா். பின்னா் குதிரைகளை அவா்களது இருப்பிடத்திற்கு ஓட்டிச் செல்லுமாறு தெரிவித்ததன் பேரில் இளைஞா்கள் குதிரைகளை அழைத்துச் சென்றனா்.

கூடலூா் பழைய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை அரசு மதுபானக்கடை திறந்ததால் மூதாட்டி ஒருவா் வரிசையில் நின்று தனது கணவருக்காக 5 மதுபாட்டில்களை வாங்கிச் சென்றாா். இந்த காட்சி சாலையில் சென்ற பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com