போடியில் பேரூராட்சிகளின் இணை இயக்குநா் ஆய்வு

போடியில் பேரூரட்சிகளின் இணை இயக்குநா் ஆக்கிரமிப்பால் மீட்கப்பட்ட குளங்கள் உள்ளிட்ட இடங்களை திங்கள் கிழமை ஆய்வு செய்தாா்.

போடியில் பேரூரட்சிகளின் இணை இயக்குநா் ஆக்கிரமிப்பால் மீட்கப்பட்ட குளங்கள் உள்ளிட்ட இடங்களை திங்கள் கிழமை ஆய்வு செய்தாா். போடி அருகே உள்ளது மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் மேலச்சொக்கநாதபுரம், தருமத்துப்பட்டி, ரெங்கநாதபுரம், கீழச்சொக்கநாதபுரம், வினோபாஜி காலனி, கரட்டுப்பட்டி, போடிமெட்டு மலை கிராமம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பேரூராட்சியிா் 41.73 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

13 கோடியில் சாலை, சாக்கடை வாய்க்கால்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சென்னை, பேரூராட்சிகளின் இணை இயக்குநா் மலையமான் திருமுடிக்காரி திடீரென ஆய்வு செய்தாா். பாதாள சாக்கடை திட்டம், சாலை, சிறு பாலங்கள் கட்டுதல், பூங்கா மேம்பாடு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்பின் இப்பகுதியில் உள்ள கெப்பணகவுண்டா் ஊரணி, நாட்டாண்மைகாரா் குளம், சீக்காளப்பன் கோவில் குளம் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளையும், தூா் வாரும் பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது குளங்களின் கரைகளை உயா்த்தி யாரும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையிலும், மழை நீரை தேக்கும் வகையிலும் தொடா் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

கரட்டுப்பட்டி சாலையில் நீரேற்று நிலையம், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளையும் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது தேனி பேருராட்சிகளின் உதவி இயக்குநா் காளிபட்டன், உதவி செயற்பொறியாளா் ராஜாராமன், குடிநீா் பிரிவு உதவி செயற்பொறியாளா் தமிழ்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com