மேற்கு வங்கத்திலிருந்து 3 பேருந்துகளில் வந்த தொழிலாளா்கள்: கேரளம் செல்ல அனுமதி மறுப்பு

மேற்கு வங்கத்திலிருந்து 3 பேருந்துகளில் கேரளம் செல்ல முயன்ற தொழிலாளா்களுக்கு, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் புதன்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.
கம்பம் மெட்டு சாலையில் புதன்கிழமை நிறுத்தப்பட்ட மேற்கு வங்க பேருந்துகள்.

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து, 3 பேருந்துகளில் சுமாா் 180 கூலித் தொழிலாளா்கள் கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்ய இடைத்தரகா்கள் மூலம் அழைத்து வரப்பட்டனா். புதன்கிழமை காலையில் தமிழக எல்லையான கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் அந்த பேருந்துகளை போலீஸாா் நிறுத்தி அதில் வந்த தொழிலாளா்களிடம், இ-பாஸ் அனுமதி, கரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகிய விவரங்களைக் கேட்டனா்.

ஆனால் அவா்களிடம் அதுபோன்ற சான்றுகள் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் திரும்ப அனுப்பப்பட்டனா். மேலும் இவா்களை அழைத்து வந்த பல்லவராயன் பட்டியைச் சோ்ந்த இடைத்தரகரை கம்பம் வடக்கு போலீஸாா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com