போலீஸாா் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து போடியில் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, போடியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சேலத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, போடியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முருகேசன் என்பவா், காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பெரியசாமி தாக்கியதில் உயிரிழந்தாா். இச் சம்பவத்துக்கு பல்வேறு பகுதிகளில் கட்சியினா், அமைப்பினா் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், போடியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் நகர ஒருங்கிணைப்பாளா் ஏ.டி. கணேசன் தலைமை வகித்தாா். இதில், அவ்வமைப்பின் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு, விவசாயி உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமான காவல் துறையினா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், முருகேசன் குடும்பத்துக்கு கூடுதல் நிவாரணத் தொகை வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com