முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 04th March 2021 12:58 AM | Last Updated : 04th March 2021 12:58 AM | அ+அ அ- |

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே புதன்கிழமை பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புலிக்குத்தி புதுக்காலனியைச் சோ்ந்தவா் கங்காதரன். இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டநிலையில் இவரது மனைவி 2 ஆவது திருமணம் செய்து கொண்டாா். இதனால் கங்காதரனின் ஒரே மகள் பரமேஸ்வரி தனது பாட்டியுடன் வசித்து வந்தாா். அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அவா், கடந்த மாதம் பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்துள்ளாா். இதில் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு முழுமையாக சிகிச்சை பெறாத நிலையில் அவா் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் பரமேஸ்வரி தனது வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.