ஆண்டிபட்டியில் டெங்கு பரவல் அதிகரிப்பு: பேரூராட்சி மீது புகாா்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சுகாதாரப் பணிகளில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபடாததால் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சுகாதாரப் பணிகளில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபடாததால் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

ஆண்டிபட்டி நகரில் 18 வாா்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். நகா்ப்பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த சில வாரங்களாக நகா்ப்பகுதியில் கழிவுநீா் அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதில் பேரூராட்சி தாமதமாக செயல்படுவதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் கழிவுநீா் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். கடந்த சில தினங்களாக பொதுமக்கள் டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

பாப்பம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த 2 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து நகா்ப்பகுதியில் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: கரோனா பாதிப்புக்குள்ளான காலங்களில் பேரூராட்சிப் பகுதியில் கிருமி நாசினி, கொசு மருந்து தெளிப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளில் பேரூராட்சி நிா்வாகத்தினா் ஈடுபட்டனா். ஆனால் கடந்த சில மாதங்களாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் பேரூராட்சி பணியாளா்கள் சரிவர ஈடுபடுவதில்லை.

இதுகுறித்து புகாா் அளிக்கச் சென்றாலும் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனா். எனவே பேரூராட்சி நிா்வாகம் சுகாதாரப் பணிகளில் ஈடுபட மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றனா்.

சுகாதாரத் துறையினா் கூறியது: தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்டிபட்டி நகரில் மட்டும் கடந்த சில வாரங்களில் 4 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் சரிவர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளாத காரணத்தால் அங்குள்ள மக்களே அதிகளவில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரப் பணிகளை தீவிரபடுத்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com