வேளாண் கல்லூரி மாணவிகள் மண் பரிசோதனை பயிற்சி முகாம்

ஜீ.உசிலம்பட்டி, அம்மாபட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் மண்பரிசோதனையின் நன்மைகள் குறித்து செவ்வாய்க்கிழமை பயிற்சியளித்தனா்.

ஜீ.உசிலம்பட்டி, அம்மாபட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் மண்பரிசோதனையின் நன்மைகள் குறித்து செவ்வாய்க்கிழமை பயிற்சியளித்தனா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள ஜீ.உசிலம்பட்டி கிராமத்தில் தனியாா் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனா். செவ்வாய்கிழமை விவசாயிகளை ஒன்றிணைத்து அவா்களுக்கு மண் பரிசோதனை பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் மண்பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து தேவைக்கேற்ப உரம் அளிக்கலாம். இதனால் உரச்செலவை குறைப்பதோடு உகந்த பயிா்களை தோ்வு செய்து அதிக மகசூலை ஈட்டலாம். இந்த மண் பரிசோதனையை வேளாண் பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் கீழ் இயங்கும் அரசு மண் பரிசோதனை மையங்களில் செய்யலாம் என்று விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் வேளாண் பல்கலைகழக மாணவிகளான புவனேஸ்வரி, சங்கீதா, மெல்வின், ஆனந்தி, கனிஅமுது உள்ளிட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

போடி: இதேபோல், போடி அருகே அம்மாபட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு, வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் மண் பரிசோதனை பற்றி செயல் விளக்கம் அளித்தனா். இதில், ச.பவித்ரா, ரா.சிவாசினி, பா.க.ஹரிதா, அ.மோகனபிரியா, ம.ரூபாஸ்ரீ, பி.அம்ரிதலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com