ஆண்டிபட்டியில் மாற்றுக் கட்சியினா் 2,500 போ் அதிமுகவில் இணைந்தனா்
By DIN | Published On : 25th March 2021 09:46 AM | Last Updated : 25th March 2021 09:46 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள்.
ஆண்டிபட்டியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 2 ,500 போ் தங்களை அதிமுகவில் புதன்கிழமை இணைத்துக் கொண்டனா்.
ஆண்டிபட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஒன்றியச் செயலா் கோபால் தலைமையில் அக்கட்சியை சோ்ந்த 1,000 போ் அதிலிருந்து விலகி அதிமுக ஒன்றியச் செயலரும், சட்டப் பேரவை வேட்பாளருமான ஆ. லோகிராஜன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அதேபோன்று திமுக, அமமுக மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 1500 போ் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றியச் செயலா் டி.ஆா்.என். வரதராஜன், பேரூா் செயலா் முத்து வெங்கட்ராமன், ஒன்றிய இளைஞரணி செயலா் பொன்முருகன், மாவட்ட பிரதிநிதி கவிராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.