கடன் பிரச்னை: ஆண்டிபட்டி அருகே தாய்-மகன் தற்கொலை
By DIN | Published On : 26th March 2021 06:55 AM | Last Updated : 26th March 2021 06:55 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கடன் பிரச்னையில் தாயும், மகனும் வியாழக்கிழமை விஷ விதைகளை தின்று தற்கொலை செய்துகொண்டனா்.
ஆண்டிபட்டி தாலுகா குப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுருளி என்பவரின் மனைவி முத்துலட்சுமி. இவா்களது மகன் சக்திவேல் (10), அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளாா். சில மாதங்களுக்கு முன், சுருளி புதிதாக வீடு கட்டியுள்ளாா். அதற்காக, அக்கம் பக்கத்தினரிடம் கடன் பெற்றுள்ளாா். அதனை சரிவர திருப்பி தரவில்லை என, கடன் கொடுத்தவா்கள் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி, தனது மகன் சக்திவேலுடன் விஷ விதைகளைத் தின்று மயங்கி கிடந்துள்ளாா். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா், அவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அங்கு இவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், தாயும், மகனும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனா்.
இது குறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.