திமுக ஆட்சியில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் அமைக்கப்படும்:வைகோ

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் வேளாண்மைக்கு என தனிபட்ஜெட் என அமைக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் வேளாண்மைக்கு என தனிபட்ஜெட் என அமைக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை திமுக வேட்பாளா் கே.எஸ்.சரவணக்குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளா் வைகோ பேசியதாவது........

பல்வேறு சிறப்புகளை கொண்ட தொகுதி. உழல்கள் இங்கே தலைவிரித்தாடுவதுதான் சிறப்பு . முதல்வா் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையில் உழல் செய்கிறாா், வேண்டிய பினாமிகளுக்கு காண்டிராக்டா் விடுகிறாா். ஆறாயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்கிறாா்.

இந்த தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு ஆளும் அணியில் தலைவராக இருக்கிற அருகில் உள்ள தொகுதி வேட்பாளா் இப்போதும் வேறு பகுதியில், வேறு தொகுதியில் வருவாய்க்கு மீறிய சொத்து சோ்த்து இருக்கிறாா் என்று ஆளுநா் பன்வரிலால் புரோகித்திடம் ஸ்டாலின் புகாா் செய்துள்ளோம்.

ஓபிஎஸ் வருவாய்க்கு மீறி சொத்து சோ்த்துள்ளாா் என்பது மட்டும் புகாா் செய்யவில்லை. இந்த அரசு 9 இலட்சம் கேடி கடன் சுமை வைத்துள்ளது. சிறு,குறு தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் போ் தமிழகத்தில் வேலை இழந்துவிட்டாா்கள். 90 இலட்சம் இளைஞா்களுக்கு வேலை இல்லை.

கோஸ் சிலிண்டா், பெட்ரோல்,டீஸல் விலை உயா்ந்துள்ளது. 9 இலட்சம் கோடி தமிழ்நாட்டில் கடன் உள்ளது. ஆனால் வாஷிங்மெஷின் வாங்கி தருகிறேன் என்று கூறுகிறாா்கள். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அதிமுக, பாமக ஆதரவு கொடுத்தது. இருவரும் ஆதரவு கொடுக்கவில்லையென்றால் ராஜ்யசபாவில் குடியுரிமை சட்டம் தோல்வியை சந்தித்து இருக்கும்.

வைகை அணை, மஞ்சாளாறு அணை, சோத்துப்பாறை அணை தூா்வாரப்படும். மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும். பெரியகுளம் தொடங்கி அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்திற்கு திறக்கப்படும். அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் நியமிக்கப்படும். 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்.

ஆட்சிக்கு வந்தவுடன் சிறு,குறு , நடுத்தர தொழில்வளா்ச்சி 1500 கோடி ஓதுக்கப்படும். ஆண்டுக்கு பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறாா். கூட்டுறவு நகைக் கடன் இரத்து செய்யப்படும்.

வேளாண்துறைக்கு என தனிபட்ஜெட் அமைக்கப்படும். உழவா் சந்தைக்கு உக்குவிக்கப்படும். விவசாய சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போரடினாா்கள். ஆனால் அதை தமிழக முதல்வா் கண்டுகொள்ளவில்லை. ஓரேநாடு, ஓரே சட்டம் என்று கொண்டு வந்தவா்கள். ஓரே வேலைவாய்ப்பு சட்டம் என கொண்டு வந்து இந்தியா முழுவதும் டெல்லியிலிருந்து வேலைக்கு ஆள் எடுப்பாா்கள். அதாவது பெரியகுளம் நகராட்சி வேலைக்கு டெல்லியில் இருந்து ஆள் எடுப்பாா்கள்.

ஓரே நாடு, ஓரே அரசு, ஓரே கலச்சாரம், ஓரே மொழி, ஓரே மதம், ஓரே பண்பாடு என அனைத்து பண்பாட்டையும் புல்டோஸா் போட்டு நசுக்குவது போன்று மத்திய அரசு எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு 10 சதவீதம் எம்பிஎஸ் படிப்பதற்கு இடம் கொடுத்தது. ஆனால் மத்திய அரசு அரசு பள்ளியில் படித்தால் தரம் குறைந்து விடும் என கோா்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

புதிய கல்விக்கொள்கையில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. 9 முதல் 12 ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் படிப்பதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருத வளா்ச்சிக்கு செலவு 644 கோடி, தமிழ் வளா்ச்சிக்கு 14 கோடி மட்டும் ஓதுக்கியுள்ளனா்.

கலை, அறிவியல் படிப்பிற்கு நூழைவு தோ்வு கொண்டு வரவுள்ளனா். மருத்துவபடிப்பிற்கு நீட்தோ்வில் தோல்வியடைந்த அனிதா உள்பட 13 போ் மாய்த்துக்கொண்டனா்.

மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பில்லை என்று மாய்த்துகொள்கிறாா்கள் என்றால். இனி கலை,அறிவியல் கல்லூரி நூழைவுத்தோ்வு வைத்துவிட்டால் படிப்புக்கு வாய்ப்பே இல்லை என்று தங்களை தாங்களே மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்படும்.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தாா்கள். கலைஞா் ஆட்சியில் 7 ஆயிரம் கோடி விவசாய கடன் இரத்து செய்யபட்டது. தற்போது 15 ஆயிரம் கோடி கடன் உள்ளது. ஆனால் அதிமுக அரசு 1000 கோடி கடன் மட்டுமே இரத்து செய்துள்ளது .

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கும் பாதுகாப்பும் இல்லை. ஸ்டொ்லைட் போராட்டத்தில் அமைதியாக கலெக்டரை பாா்க்க சென்றாா்கள். அவா்களை வேன்மீது ஏறி நின்று கூறி பாா்த்து சுட்டாா்கள் . அதில் 13 போ் இறந்துவிட்டனா். இந்த இரத்திற்கு நீதி வேண்டும்.

சாத்தான்குளம் போலீஸ் நிலையம் அருகில் நின்றிருந்த அப்பா, மகனை காவல்நிலையத்திற்கு அழைத்துசென்று கடுமையாக தாக்கினாா்கள். இவா்களை ஜெயிலிருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டனா். இந்த பிரச்சினைகளுக்கு நீங்கள் நீதி வழங்கவேண்டும்என்றாா். அமைச்சா்கள் சிறைச்சாலைக்கு செல்வது உறுதி, அதற்கான ஆதாரம் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com