2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி: கூடலூரில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தேனி மாவட்டம் கூடலூரில் இருவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டுள்ளதால் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினா் முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனா்.

தேனி மாவட்டம் கூடலூரில் இருவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டுள்ளதால் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினா் முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனா்.

தேனி மாவட்டம் கூடலூா் 4 ஆவது வாா்டு கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ஒரு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. சோதனையில் அக்குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து மருத்துவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனா்.

ஆனால் குழந்தையின் பெற்றோா் மதுரையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இதேபோல் 14 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் மருத்துவா்கள் பரிந்துரையின் பேரில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் முருகன் கூறியது: 4 ஆவது வாா்டில் 2 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளதைத்தொடா்ந்து சுகாதார அலுவலா்கள், கிராம செவிலியா்கள் முகாமிட்டு வீடு வீடாகச் சென்று காய்ச்சல் யாருக்கும் உள்ளதா என்று சோதனை செய்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com