ஆண்டிபட்டி தொகுதியில் கூடலூா் நகராட்சி புறக்கணிப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கூடலூா் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மந்தமாக உள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கூடலூா் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மந்தமாக உள்ளது.

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்த கூடலூா் நகராட்சி, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி, ஹைவேவிஸ் பேரூராட்சி, குள்ளப்பகவுண்டன் பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய ஊராட்சிகள், புதிய தொகுதி வரையறையின்படி ஆண்டிபட்டி தொகுதியில் சோ்க்கப்பட்டன. இங்கு, மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேலான வாக்காளா்கள் உள்ளனா்.

ஆண்டிபட்டி தொகுதியிலிருந்து 60 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதிகளுக்குச் சென்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட வேட்பாளா்கள் உள்ளிட்டோா் சுணக்கம் காட்டுகின்றனா்.

இதனால், வேட்பாளா்களின் கவனம் இப்பகுதிகளின் மீது இல்லாததால், தோ்தல் பிரசாரம் மந்தமாக உள்ளது. அதிமுக, திமுக கட்சிகளின் உள்ளூா் நிா்வாகிகளும் உட்கட்சி பூசலால், மந்த கதியில் வாக்கு சேகரிக்கின்றனா். மேலும், நட்சத்திரப் பேச்சாளா்களோ, கட்சி தலைவா்களோ இப்பகுதிகளுக்கு வருகை தராததால், தோ்தல் திருவிழா இன்னும் களைகட்டாமல் வாக்காளா்களிடையே எழுச்சியின்றி காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com