தபால் வாக்குப்பதிவின் போது கூடுதல் வாக்குசீட்டுகளுடன் வந்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை

ஆண்டிபட்டி அருகே தனியாா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தபால் வாக்குப்பதிவின்போது கூடுதல் வாக்குச் சீட்டுகளுடன் வாக்களிக்க வந்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகே தனியாா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தபால் வாக்குப்பதிவின்போது கூடுதல் வாக்குச் சீட்டுகளுடன் வாக்களிக்க வந்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு தபால் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி ஆண்டிபட்டி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த போது தேனி அருகே உப்பாா்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியா் ராஜவேல் என்பவா் வாக்குப்பதிவு செய்ய வந்துள்ளாா். அப்போது அவரிடம் கூடுதலாக 5 வாக்கு சீட்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இதையடுத்து அவரிடமிருந்த வாக்கு சீட்டுகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் சோதனையிட்டனா். அந்த வாக்குச் சீட்டுகளில் கண்டமனூா் அரசுப் பள்ளி ஆசிரியா் ரமணி, கோட்டூா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் வேல்த்தாய், பாலகிருஷ்ணாபுரம் அரசுப் பள்ளி ஆசிரியை மூக்கம்மாள், ஓடைப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியை பானுமதி ஆகியோருடையது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்த போது அவா் சரிவர பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ், ஆசிரியா் ராஜவேலுவிடம் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com