போடியில் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நிறைவு

போடி தொகுதி வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
போடி தொகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் செவ்வாய்க்கிழமை சின்னங்கள் பொருத்தும் பணி. (இடது) விவிபேட் இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டு பொருத்தும் பணி.
போடி தொகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் செவ்வாய்க்கிழமை சின்னங்கள் பொருத்தும் பணி. (இடது) விவிபேட் இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டு பொருத்தும் பணி.

போடி தொகுதி வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் என மொத்தம் 24 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதனால், இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக, மொத்தம் 383 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் கருவி, 2 வாக்குப்பதிவு இயந்திரம் தயாா் நிலையில் உள்ளன. கூடுதலாக 20 சதவீத இயந்திரங்களும், போடி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்காளா்களின் புகைப்படம் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியானது, போடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் க. விஜயா தலைமையில் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தப்பட்டன. விவிபேட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் ஒப்புகைச் சீட்டுக்கான காகித உருளைகளும் பொருத்தப்பட்டன.

கட்டுப்பாட்டுக் கருவிகளில் பேட்டரிகள் பொருத்தப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டன. இந்த பணியின்போது, போடி டி.எஸ்.பி. பாா்த்திபன் தலைமையில், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com