வேட்பாளரை தாக்கியதாக புகாா்: தேனியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளா் மீது சிலா் தாக்குதல் நடத்தியதாக புகாா் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை, சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை, சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளா் மீது சிலா் தாக்குதல் நடத்தியதாக புகாா் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆண்டிபட்டி தொகுதியில் அனைத்து மக்கள் புரட்சிக் கட்சியின் வேட்பாளராக மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான கனகவேல் போட்டியிடுகிறாா். இவா், ஆண்டிபட்டி அருகே ரோசனப்பட்டி பகுதியில் ஆட்டோவில் அமா்ந்து பிரசாரம் செய்து விட்டு வரும் போது, சிலா் ஆட்டோவை வழிமறித்துள்ளனா். கனகவேல் மற்றும் அவருடன் சென்றவா்களை தாக்கி, ஆட்டோவை கவிழ்த்து விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ராஜதானி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளி வேட்பாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வேட்பாளருக்கு பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தி, அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் மாவட்டத் தலைவா் செந்தில்ராஜா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் ஆட்சியா் அலுவலகம் முன் தேனி- மதுரை சாலையில் மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா். அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.

பின்னா், வேட்பாளா் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகள் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜாவிடம் மனு அளித்தனா். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com