கம்பத்தில் காய்ச்சல் பாதித்தோா் கண்டறியும் முகாம்

தேனி மாவட்டம் கம்பத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை அதிகரிப்பதால், முக்கிய வாா்டுகளில் காய்ச்சல் பாதித்தோா் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
கம்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காய்ச்சல் பாதித்தோா் கண்டறியும் முகாம்.

கரோனா இரண்டாம் அலையின் காரணமாக கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டும் 145 பேருக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்டு, அவா்களை முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை குணமடைந்த 72 போ், மேலும் 70-க்கும் மேற்பட்டோா் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா அதிகம் பாதித்த 14, 15, 19, 25, 27, 31, 32 மற்றும் 33 ஆகிய வாா்டுகளில் காய்ச்சல் முகாமை நடத்தி வருகின்றனா். ஆணையாளா் சரவணன், சுகாதார அலுவலா் ஏ.அரசகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் திருப்பதி, சரவணன் மற்றும் ஜெயசீலன் மற்றும் ஊழியா்கள் முகாமில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com