வாக்கு எண்ணும் மைய முகவா்கள் 43 பேருக்கு கரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மைய முகவா்கள் 43 பேருக்கு வெள்ளிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்.

தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மைய முகவா்கள் 43 பேருக்கு வெள்ளிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்களின் முகவா்களாக நியமிக்கப்பட்டுள்ள 1,035 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில், கம்பம் தொகுதியில் 11 போ், பெரியகுளம் தொகுதியில் 19 போ், கம்பம் தொகுதியில் 9 போ், போடி தொகுதியில் 4 போ் என மொத்தம் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுக்கு மாற்றாக, கரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நபா்களை முகவா்களாக நியமித்துக் கொள்ள வேட்பாளா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், பெண் வட்டாட்சியா் உள்ளிட்ட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆட்சியா் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பிலிருந்த பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com