போடியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி

போடி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்லவம் 11,021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
போடியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி

போடி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்லவம் 11,021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேனி மாவட்டம், போடி தொகுதியில் மொத்தமுள்ள 2,77,604 வாக்காளர்களில், 2,14,795 பேர் தேர்தலில் வாக்களித்தனர். இத்தொகுதியில் அதிமுக சார்பில் 3-வது முறையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் தங்க.தமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் எம்.முத்துச்சாமி உள்ளிட்ட 24 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

மொத்தம் 29 சுற்றுகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மொத்தம் 1,00,050 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். போடி தொகுதியில் கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 2 தேர்தலில்களில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம், தற்போது இதே தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் விபரம்:

ஓ.பன்னீர்செல்வம்(அதிமுக) - 1,00,050

 தங்க.தமிழ்ச்செல்வன்(திமுக) - 89,029

எம்.முத்துச்சாமி(அமமுக) - 5,649 

பிரேம்சந்தர்(நாம் தமிழர் கட்சி) -11,114

கணேஷ்குமார்(மக்கள் நீதி மய்யம்) - 4,128

தபால் வாக்குகளில் திமுக முன்னிலை: போடி தொகுதியில் மொத்தம் 2,948 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில், திமுக 1,887 வாக்குகள், அதிமுக 754, அமமுக 55, நாம் தமிழர் கட்சி 132, மக்கள் நீதி மய்யம் 59 வாக்குகள் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com