இடுக்கி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மே 16 வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்ட எல்லையான குமுளி நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு.

தேனி மாவட்ட எல்லையான, தமிழா்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் கரோனா தொற்று பரவல் காரணமாக மே.9 வரை தளா்வுகளுடன் பொது முடக்கம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து, கேரள அரசு தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்தை மே 8 ஆம் தேதி காலை 6 மணி முதல் 16 ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு அறிவித்துள்ளது.

இதனால் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் குமுளி, கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் இரு மாநில காவல் மற்றும் வனத்துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா்.

எல்லைப் பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு செல்லும் பயணிகளுக்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்தல், இ- பாஸ் அனுமதி சோதனை போன்றவைகள் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com