அணைகளுக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து
By DIN | Published On : 16th May 2021 10:40 PM | Last Updated : 16th May 2021 10:40 PM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால், அணைகளுக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து உள்ளது.
மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகளவில் கூடலூரில் 15.3 மி.மீ., மழை பெய்துள்ளது. உத்தமபாளையத்தில் 9.4 மி.மீ., வீரபாண்டியில் 13, வைகை அணை நீா்பிடிப்பில் 9.4, சோத்துப்பாறை அணை நீா்பிடிப்பில் 15, மஞ்சளாறு அணை நீா்பிடிப்பில் 3, சண்முகாநதி அணை நீா்பிடிப்பில் 7.6 மி.மீ., மழை பெய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பில் 53.8 மி.மீ., தேக்கடியில் 55 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
அணைகளின் நிலவரம்: முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம் 129.60 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 2,478 கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீா்மட்டம் 62.93 அடி. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 930 கன அடி. அணையிலிருந்து விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு 253 கன அடியும், மஞ்சளாறு அணைக்கு விநாடிக்கு 79 கன அடியும் தண்ணீா் வரத்து உள்ளது.