குமுளி அருகே கன மழை: வீடுகள் சேதம்; மரம் காரில் விழுந்து பெண் பலி

குமுளி மற்றும் வட்டாரப் பகுதிகளில் டவ்-தே புயல் எதிரொலியாக கன மழை பெய்வதால் 10-க்கும் மேலான வீடுகள் சேதமடைந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த காரில் மரம் விழுந்து பெண் ஒருவர் பலியானார்.
குமுளி அருகே கன மழை: வீடுகள் சேதம்; மரம் காரில் விழுந்து பெண் பலி

குமுளி மற்றும் வட்டாரப் பகுதிகளில் டவ்-தே புயல் எதிரொலியாக கன மழை பெய்வதால் 10-க்கும் மேலான வீடுகள் சேதமடைந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த காரில் மரம் விழுந்து பெண் ஒருவர் பலியானார்.

தேனி மாவட்டம் அருகே உள்ளது இடுக்கி மாவட்டம். மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்திருப்பதால் டவ்-தே புயல் எதிரொலியாக குமுளி, கட்டப்பனை, நெடுங்கண்டம், வண்டன்மேடு, வண்டிப்பெரியார், பீர்மேடு, மாலி, புத்தடி, ஆமையார், சேத்துக்குழி  உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் பல பகுதிகளில் தொடர் மின்சார தடை ஏற்பட்டது. குமுளி, ரோசாப்பூ கண்டம், 1ஆம் மைல், அணைக்கரை பகுதிகளில் 10-க்கும் மேலான வீடுகளில் மரங்கள் விழுந்து மேற்கூரை, சுவர்கள் இடிந்து விழுந்தன. தொடர் மழை எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் புளியமலை கட்டப்பனை சாலையில் தொடுபுழாவைச் சேர்ந்த செபாஸ்டின் அவரது மனைவி சூசம்மாள், மகள் அருள் செபாஸ்டின் ஆகியோர் காரில் சென்றனர்.

அப்போது பலத்த காற்று வீசியதால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பெரிய மரம் ஒன்று செபாஸ்டின் குடும்பத்தினர் பயணம் செய்த கார் மீது விழுந்தது, இதில் மூவரும் படுகாயமடைந்தனர், காயம்பட்ட மூவரையும் கட்டப்பனை புனித ஜான் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மீட்புப் படையினர் அங்கு தீவிர சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூசம்மாள் (55) பலியானார்.

இதுபற்றி கட்டப்பனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மீட்புப் படையினர் காரை அப்புறப்படுத்தி, மேலும் சாலையில் உள்ள மரங்களை அகற்றி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com