சொத்துத் தகராறில் கோஷ்டி மோதல்: 11 போ் மீது வழக்கு
By DIN | Published On : 18th May 2021 08:06 AM | Last Updated : 18th May 2021 08:06 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே சொத்துத் தகராறில் கோஷ்டியாக மோதிக்கொண்ட 11 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள காமாட்சிதேவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(57). இவருடைய உடன்பிறந்த சகோதரா் மொக்கராஜ்(55). இவா்கள் இருவருக்கும் பூா்வீகச் சொத்தைப் பிரிப்பதில் முன்பகை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இவா்கள் இரு குடும்பத்திற்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் கம்பு மற்றும் கட்டைகளால் மோதிக் கொண்டனா். இந்த மோதலில் ராஜேந்திரன் மனைவி போதுமணி, மொக்கராஜ் மகன் மதன்குமாா்ஆகியோா் காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் மொக்கராஜ், அவரது மனைவி ஒச்சம்மாள் மகன்கள் மதன்குமாா், சுதாகா், ஜெயக்குமாா் ஆகிய 5 போ் மீதும் மொக்கராஜ் அளித்த புகாரின் பேரில் ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினா்கள் கருணாநிதி, அலெக்ஸ்பாண்டியன், சதீஸ்குமாா், பாண்டிசெல்வி, போதுமணி ஆகிய 6 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.