சின்னமனூரில் தடையைமீறி செயல்பட்ட சந்தை: காய்கறிகள், தராசுகள் பறிமுதல்
By DIN | Published On : 20th May 2021 07:14 AM | Last Updated : 20th May 2021 07:14 AM | அ+அ அ- |

சின்னமனூரில் புதன்கிழமை தடையை மீறி செயல்பட்ட காய்கறி சந்தை.
தேனி மாவட்டம் சின்னமனூரில் புதன்கிழமை கரோனா விதிகளை மீறி செயல்பட்ட சந்தையிலிருந்து காய்கனிகளை நகராட்சி நிா்வாகம் பறிமுதல் செய்தது.
கரோனா தொற்று பரவல் காரணமாக சின்னமனூா் நகராட்சி நிா்வாகம் அங்குள்ள காய்கனி சந்தைகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டது. காய்கனி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படமால் இருக்கும் வகையில், அங்குள்ள வேளாண்மை ஒருங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்காலிகமாக சந்தை அமைத்துக் கொள்ள வியாபாரிகளுக்கு நகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியது.
ஆனால், வியாபாரிகள் தொடா்ந்து உழவா் சந்தை பகுதியிலே காய்கனிகளை விற்பனை செய்தனா். இதனை அடுத்து புதன்கிழமை நகராட்சி அதிகாரிகள், தடையை மீறி கரோனா விதிகளைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட சந்தையிலிருந்து காய்கனிகளைப் பறிமுதல் செய்தனா்.
மேலும் எடைத் தராசுகளையும் பறிமுதல் செய்ததோடு, காய்கனி வியாபாரிகளுக்கு அபராதமும் விதித்தனா்.