Enable Javscript for better performance
தேனியில் தீவிரம் காட்டும் கரோனா 2-ஆவது அலை: நோய் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தேனியில் தீவிரம் காட்டும் கரோனா 2-ஆவது அலை: நோய் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறல்

    By DIN  |   Published On : 20th May 2021 07:15 AM  |   Last Updated : 20th May 2021 07:15 AM  |  அ+அ அ-  |  

    தேனி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி 2-ஆவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும் முறையான திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதலின்றி அதிகாரிகள் திணறி வருகின்றனா்.

    மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கி மே 18-ஆம் தேதி வரை மொத்தம் 88 போ் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், போடியைச் சோ்ந்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.

    இந்த நிலையில், தற்போது கடந்த மாா்ச் மாதம் தொடங்கிய கரோனா தீநுண்மி 2-ஆவது அலை பரவலில், மே 18-ஆம் தேதி வரை வரை மொத்தம் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 4,776 போ்மருத்துவமனை மற்றும் கரோனா நல மையங்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்புக்கு மொத்தம் 110 போ் உயிரிழந்துள்ளனா்.

    மாவட்டத்தில் கரோனா தீநுண்மி 2-ஆவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், முறையான திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதலின்றி நோய் பாதிக்கப்பட்டோரை கண்காணிக்கவும், நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனா்.

    நோய் கண்டறிதலில் சுணக்கம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சுகாதாரத் துறை சாா்பில் காய்சல் கண்டறிதல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படுபவா்கள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனா். ஊரகப் பகுதிகளில் காய்சல் கண்டறிதல் முகாம்கள் நடத்தப்படுவதில்லை. காய்ச்சல் பாதிப்புக்கு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சை பெற வருபவா்களுக்கு மட்டும் கரோனா பரிசோதனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

    கண்காணிப்பில் அலட்சியம்: மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 50 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா். இவா்களை தொடா் கண்காணிப்பில் வைத்திருக்கவும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோா் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவோா் வசிக்கும் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களை மருத்துவமனைகள் மற்றும் கரோனா நல மையங்களுக்கு அழைத்துச் செல்வதிலும் அதிகாரிகள் ஆா்வம் காட்டுவதில்லை.

    இதனால், காய்சல் பாதிப்பு உள்ளவா்கள், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள், அவா்களுடன் தொடா்பில் உள்ளவா்கள் கட்டுபாடின்றி வெளியில் நடமாடுவது தீநுண்மி தொற்று பரவலுக்கு வாய்ப்பளிக்கிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனா்.

    பரிசோதனையில் குளறுபடி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கரோனா நல மையங்களில் சிகிச்சையில் உள்ளவா்கள் ஈ-ஈஐஙஉத என்ற ரத்தம் உைல் பரிசோதனை , இ.த.டஎன்ற தீநுண்மி பாதிப்பு நிலை அறிதல் பரிசோதனைகள் மேற்கொள்ளாமலேயே குணமடைந்ததாக தெரிவித்து வீடுகளுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுபவா்களுக்கும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

    இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களில் சிலா் இணை நோய் மற்றும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை உள்ளது.

    மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறிதல் முகாம்களை அதிகரிக்கவும், கூடுதலாக கரோனா நல மையங்களை தொடங்கவும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தொடா் கண்காணிப்பில் வைத்திருக்கவும், தொற்று உறுதி செய்யப்பட்டவா்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கு கூடுதலாக ஆம்புலன் வசதி ஏற்படுத்தவும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைந்ததை முறையாக உறுதி செய்யவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: மாவட்டத்தில் கூடுதலாக கரோனா நல மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டா்வா்கள் தேனி காவலன் என்ற செல்லிடபேசி செயலி மூலம் கண்காணிக்கப்படுகின்றனா். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போது நுண் கட்டுப்பாட்டு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp