தேனி மாவட்ட விவசாயிகள் புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

தேனி மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேனி மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முழு பொது முடக்கத்தின்போது விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்தல், விளைபொருள்களை எடுத்துச் செல்லுதல் மற்றும் வேளாண் பணிக்குச் செல்வதில் ஏற்படும் சிரமம் ஆகியவற்றில் ஏற்படும் இடா்பாடுகளைக் களைவதற்காக தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் 04546 - 250101 என்ற தொலைபேசி எண்ணிலும், 83001 08666 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவித்தால், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com