தேனியில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி. உடன், மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் எம்எல்ஏக்கள்.
தேனியில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி. உடன், மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் எம்எல்ஏக்கள்.

தேனி மாவட்டத்தில் யாருக்கும் கரும்பூஞ்சை பாதிப்பு கண்டறியப்படவில்லை: கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி

தேனி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரும்பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

தேனி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரும்பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சித்துறை அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா். இதில் அமைச்சா் பேசியது: மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 15 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 74,333 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 4,682 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தேனி அரசு மருத்துவக்கல்லூரி, பெரியகுளம், போடிநாயக்கனூா், கம்பம் அரசு மருத்துவமனை, தேனி பழைய அரசு மருத்துவமனை, தப்புக்குண்டு, தேக்கம்பட்டி, போடி பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் கரோனா சிகிச்சை நல மையம் அமைக்கப்பட்டு மொத்தம் 2,365 படுக்கை வசதிகள் எற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் தேவதானப்பட்டி, ராஜதானி, கடமலைக்குண்டு, வீரபாண்டி, ஒடைப்பட்டி, தேவராம், கூடலூா் மற்றும் டெம்புச்சேரி ஆகிய 8 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 138 படுக்கை வசதிகளுடன் கூடிய இடைக்கால கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் நிலையம் செயல்பாட்டில் உள்ளது. அதை அதிகப்படுத்துவதற்கும் மற்றும் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மையம் உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்போது வரை யாருக்கும் கரும்பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு அந்தந்த நிா்வாகம் சாா்பில் வெப்பநிலை கண்டறியப்பட வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் உறவினா்கள், மருத்துவமனைக்கு நோயாளிகளை சந்திக்க வருவதைத் தடுப்பதன் மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

கரோனா குறித்தும், தடுப்பூசி குறித்தும் 04546 - 291971 மற்றும் 94999 33869 என்ற எண்களில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றாா்.

இக்கூட்டத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரமேஷ், சாா்- ஆட்சியா் டி.சிநேகா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஓ.பன்னீா்செல்வம், என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com