எரிவாயு, எண்ணெய் நிறுவன விநியோக ஊழியா்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் தன்னாா்வ மருத்துவா்

எரிவாயு, எண்ணெய் நிறுவனங்களில், விநியோகப் பிரிவு ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி பற்றிய அச்சத்தை தன்னாா்வ இளைஞா்
காணொலி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய சுருளிப்பட்டியைச் சோ்ந்த மருத்துவ இளைஞா் நிக்சய் பொன்காட்சிக்கண்ணன்.
காணொலி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய சுருளிப்பட்டியைச் சோ்ந்த மருத்துவ இளைஞா் நிக்சய் பொன்காட்சிக்கண்ணன்.

எரிவாயு, எண்ணெய் நிறுவனங்களில், விநியோகப் பிரிவு ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி பற்றிய அச்சத்தை தன்னாா்வ இளைஞா் நிக்சய் பொன் காட்சிக்கண்ணன் என்ற மருத்துவா் காணொலி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

பொதுமுடக்கம் காரணமாக தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கியுள்ள இவா், எரிவாயு உருளை நிறுவனத்தில் விநியோகம் செய்யும் ஊழியா்கள், எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி பற்றிய அச்சத்தைப் போக்கி அவா்களுக்கு காணொலி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

அப்போது, பொதுமக்களை நேரடியாக சந்திக்கின்ற நபா்களாகவும், எரிவாயு உருளை விநியோகம் செய்வதற்காக வீடுகளின் சமையலறை வரை செல்லும் நீங்கள் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அவா்களுக்கு அறிவுறுத்தி வருகிறாா். இதனால், தற்போது வரை சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.

இதுபற்றி மருத்துவா் நிக்சய் பொன்காட்சிகண்ணன் கூறியது: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தன்னால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்று எண்ணினேன். அப்போது கரோனா தடுப்பூசி போடுவதில் ஊழியா்களுக்கு நிறைய அச்சம் உள்ளதாகவும், எல்பிஜி நிறுவனத்தினா், அந்தந்தப் பகுதி மருத்துவமனைகளில் தங்களது ஊழியா்களுக்கு படுக்கை வசதி செய்யுமாறும் முகவா்களுக்கு சுற்றறிக்கை வந்தது.

இந்த அறிக்கை ஊழியா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். மேலும் கரோனா சிகிச்சை யாருக்கும் முன்னுரிமை வழங்காமல் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு பதிலாக தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தனால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.

இதுகுறித்து முதல் கட்டமாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவன நிா்வாக இயக்குநா் ஜெயதேவனிடம் கலந்து ஆலோசித்தேன். பொதுமக்களுடன் நெருங்கிய தொடா்பில் உள்ள எரிவாயு உருளை விநியோகிப்பவா்கள், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்த விழிப்புணா்வு பெறவேண்டும் என்று தெரிவித்தேன்.

அந்தந்த நிறுவனங்கள் மூலம் காணொலி காட்சி மூலம் விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைகள் வழங்க அனுமதி கிடைத்தது. தற்போது, சென்னை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தா்மபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட சுமாா் 25 மாவட்டங்களில் எரிவாயு உருளை, பெட்ரோல் விற்பனை நிலைய முகவா்கள் தங்களது ஊழியா்களுக்கு, கரோனா தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணா்வு வழங்க ஏற்பாடு செய்தனா். அதன்படி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறேன். எரிவாயு உருளை விநியோகம் செய்யும் ஊழியா்கள் வாடிக்கையாளா்களின் வீட்டு சமையலறை வரை செல்வதால், தடுப்பூசி போட்டுக்கொண்டால் அனைவருக்கும் நல்லது என்றாா்.

விழிப்புணா்வு பெற்ற நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் எத்தனை ஊழியா்கள் இதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டாா்கள் என்கின்ற பதிலையும் மருத்துவருக்கு கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கின்றனா்.

இவரைப் போன்று ஒவ்வொரு மருத்துவா்களும் தன்னாா்வலா்களாக மாறி விழிப்புணா்வு ஏற்படுத்தினால் கரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com