கூடலூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா், ஊழியா்களுக்கு கரோனா

தேனி மாவட்டம் கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவப் பணிகள் முடங்கின.
கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

தேனி மாவட்டம் கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவப் பணிகள் முடங்கின.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தில் தற்போது 5 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் இங்கு பணிபுரியும் 2 மருத்துவா், 6 சுகாதார ஆய்வாளா்கள், எக்ஸ்ரே நிபுணா், லேப்- டெக்னீசியன் மற்றும் 4 சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வெளி மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால் குறைந்த அளவிலான மருத்துவா் மற்றும் பணியாளா்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனா்.

சுகாதார நிலைய தலைமை மருத்துவா் பி. முருகன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவா்கள், சுகாதார பணியாளா்களுக்கு செல்லிடப்பேசி மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவி வருகிறாா்.

கூடுதல் மருத்துவா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்களை விரைவில் பணியமா்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com