லோயர் கேம்ப் சாலையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை மீட்க கோரி கேரள எல்லைகளை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை லோயர்கேம்ப்பில் நடைபெற்றது.
லோயர் கேம்ப் சாலையில் விவசாயிகள் போராட்டம்
லோயர் கேம்ப் சாலையில் விவசாயிகள் போராட்டம்

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை மீட்க கோரி கேரள எல்லைகளை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை லோயர்கேம்ப்பில் நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு தொடர்ந்து இடையூறுகள் செய்து வருவதை முன்னிட்டு பெரியாறு, வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவத அறிவிக்கப்பட்டது.

அதன்பேரில் திங்கள்கிழமை விவசாய சங்க மாநில தலைவர் எஸ். ஆர். தேவர் தலைமையில் லோயர் கேம்பில் பென்னி குயிக் மணிமண்டபத்தில் முன்பாக விவசாயிகள் கூடினர்.

பின்னர் குமுளி செல்லும் சாலையை நோக்கி செல்ல முயன்றனர், விவசாயிகளை காவல் ஆய்வாளர் கே.முத்துமணி,  உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன் அவர்களை  செல்ல கூடாது என்று தடுத்தனர்.  இதனால் விவசாயிகள் அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கேரள அரசை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை தேனி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதுபற்றி உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன் மாவட்ட  ஆட்சியரிடம் செல்லிடப்பேசி மூலம் பேசினார், மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் விவசாயிகளை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக் கூறினார் அதன்பேரில் 10 கோரிக்கைகளுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பொன்.கட்சி கண்ணன், துணைச் செயலாளர் லோகநாதன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், நிர்வாகக்குழு சலேத்து உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com