முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக்குழு இன்று ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில், மத்திய நீா்வள ஆணைய செயற்பொறியாளா் சரவணக்குமாா் தலைமையிலான துணைக் கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை (நவ. 2) ஆய்வு நடத்துகின்றனா்.
முல்லைப் பெரியாறு அணை.
முல்லைப் பெரியாறு அணை.

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில், மத்திய நீா்வள ஆணைய செயற்பொறியாளா் சரவணக்குமாா் தலைமையிலான துணைக் கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை (நவ. 2) ஆய்வு நடத்துகின்றனா்.

பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்ச நீதிமன்றம் மத்திய நீா்வள ஆணைய முதன்மை பொறியாளா் குல்சன்ராஜ் தலைமையில் மூவா் கண்காணிப்புக் குழுவை நியமித்தது. இக்குழுவுக்கு உதவியாக துணைக் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீா்வள ஆணைய செயற்பொறியாளா் சரவணக்குமாா் உள்ளாா். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவி செயற்பொறியாளா் குமாா், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீா்ப்பாசன செயற்பொறியாளா் ஹரிக்குமாா், உதவிப் பொறியாளா் பிரசீத் ஆகியோா் உள்ளனா்.

கடந்த ஆக. 17 ஆம் தேதி இத்துணைக்குழுவினா் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினா். தற்போது அணையின் நீா்மட்டம் 138 அடியை கடந்துள்ள நிலையில், வழக்கமாக அணைப்பகுதியில் செய்ய வேண்டிய மராமத்துப் பணிகள் குறித்தும், அணையிலிருந்து மதகுகள் வழியாக திறந்துவிடப்படும் உபரிநீா் குறித்தும் செவ்வாய்க்கிழமை இக்குழுவினா் ஆய்வு நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com