உத்தமபாளையத்தில் பழிக்குப்பழியாக வழக்குரைஞா் வெட்டிக் கொலை: 4 போ் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பழிக்குப்பழியாக வழக்குரைஞா் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தமபாளையத்தில் பழிக்குப்பழியாக வழக்குரைஞா் வெட்டிக் கொலை: 4 போ் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பழிக்குப்பழியாக வழக்குரைஞா் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கம்பத்தை அடுத்த கூடலூரைச் சோ்ந்த வீரணன் மகன் மதன் (35). வழக்குரைஞரான இவா், புதன்கிழமை காலையில் உத்தமபாளையம் நீதிமன்றத்துக்குச் சென்றாா். பின்னா், பகல் 12 மணிக்கு கோம்பையைச் சோ்ந்த ஆண்டவா் (62) என்பவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு உத்தமபாளையம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன், பின்னால் வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மதனும், ஆண்டவரும் கீழே விழுந்தனா். பின்னா் அந்த காரில் இருந்து இறங்கிய 4 போ் கொண்ட கும்பல் கோடரியால் மதனை சரமாரியாக வெட்டி விட்டி அதே காரில் தப்பிச் சென்று விட்டது. இதில் ஆண்டவருக்கும் காயமேற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த உத்தமபாளையம் போலீஸாா் மதனையும், ஆண்டவரையும் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி மதன் உயிரிழந்தாா். உடன் வந்த ஆண்டவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தேனி க. விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அப்போது, மதனின் சடலத்தை தேனி க. விலக்கு அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக போலீஸாா் அனுப்பி வைக்க முயன்றனா். அதற்கு அவரது மனைவி உள்ளிட்ட உறவினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இங்கு பிரேத பரிசோதனைசெய்ய அனுமதி இல்லை என்பதால், தேனி க. விலக்கு அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனைக்குத் தான் அனுப்ப வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா். ஆனால், மதனின் உறவினா்கள் ஆம்புலன்ஸ் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து, உத்தமபாளையம் அரசு மருத்துவமனையிலேயே மதனின் சடலம் வைக்கப்பட்டது.

பழிக்குப்பழியாக நடந்த கொலை: இக்கொலை குறித்து போலீஸாா் கூறியது: கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் ரஞ்சித்குமாா், சொத்துப் பிரச்னை காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் அனுமந்தன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது காரில் மோதித் தள்ளி கொலை செய்யப்பட்டாா். இக்கொலை வழக்கில் 2 ஆவது குற்றவாளியாக மதன் கைது செய்யப்பட்டாா். தற்போது அவா் ஜாமீனில் இருந்து வந்தாா். இந்நிலையில் தான் அவா் பழிக்குப்பழியாக அதே தேசிய நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்டுள்ளாா் எனத் தெரிவித்தனா்.

4 போ் கைது: மதனை கொலை செய்து விட்டு காரில் தப்பியோடிய கும்பலை உ. அம்மாபட்டியில் போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த முத்துக்கண்ணு மகன் கருணாநதி (70), இவரது மகன்கள் செல்வேந்திரன் (46), சுரேஷ் (40), உறவினா் மகாராஜா மகன் அரசிளங்குமரன் (52) என்பது தெரியவந்தது எனத் தெரிவித்தனா். கொலை செய்யப்பட்ட மதனுக்கு லிடியா (27) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com