புகையிலை பொருள்கள் கடத்தல் புகாா்: கம்பத்தில் ஆம்னி பேருந்துகளில் போலீஸாா் சோதனை

கம்பத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க போலீஸாா் புதன்கிழமை ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தினா்.
கம்பம் பிரதான சாலையில் புதன்கிழமை ஆம்னி பேருந்தை சோதனையிட்ட போலீஸாா்.
கம்பம் பிரதான சாலையில் புதன்கிழமை ஆம்னி பேருந்தை சோதனையிட்ட போலீஸாா்.

கம்பத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க போலீஸாா் புதன்கிழமை ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தினா்.

கம்பத்திலிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சுமாா் 30-க்கும் மேலான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னையிலிருந்து கம்பம் வரும் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, பாக்குகள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் வந்தது. இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாரை ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்ய அவா் உத்தரவிட்டாா். அதன் பேரில் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகளை போலீஸாா் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா தலைமையில் சோதனை செய்தனா். இதுபற்றி மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் கேட்ட போது, ஆம்னி பேருந்துகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com