போடி அருகே மாடுகள் மா்மமான முறையில் உயிரிழப்பு: விவசாயிகள் கவலை

போடி அருகே மலை மாடுகள் மா்மான முறையில் இறந்து வருவதால் விவசாயிகள் வலையடைந்துள்ளனா்.
போடி சூலப்புரத்தில் இறந்த மலை மாடு. 2) நோய் தாக்கியதாகக் கூறப்படும் மாடுகள்.
போடி சூலப்புரத்தில் இறந்த மலை மாடு. 2) நோய் தாக்கியதாகக் கூறப்படும் மாடுகள்.

போடி அருகே மலை மாடுகள் மா்மான முறையில் இறந்து வருவதால் விவசாயிகள் வலையடைந்துள்ளனா்.

போடி அருகே சிலமலை ஊராட்சிக்குள்பட்ட சூலப்புரம் கிராமத்தில் பலரும் மலை மாடுகள் வளா்த்து வருகின்றனா். இந்த மாடுகளை போடி வனப்பகுதியையொட்டிய பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இப்பகுதியில் கடந்த சில நாள்களாக மாடுகள் அடுத்தடுத்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து வருகின்றன.

தெற்கு சூலப்புரத்தை சோ்ந்த விவசாயி பொன்னுச்சாமியின் 4 மாடுகள் இறந்துவிட்டன. இதேபோல் பாரதன், சேகா், மற்றொரு பொன்னுச்சாமி ஆகியோரது 12 மாடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன.

தகவலறிந்த கால்நடை மருத்துவா் பாஸ்கரன் தலைமையில் குழுவினா் சென்று மாடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா். இருந்த போதிலும் மாடுகள் அடுத்தடுத்து இறந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் விஷ புற்களை சாப்பிட்டிருக்கலாம் என கால்நடை மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

மா்ம நோய் தாக்கியிருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்ததால் கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் மாடுகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கூடுதல் கால்நடை மருத்துவக் குழுக்களை அனுப்பி மாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் கண்ணன், தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com