முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பு 126 ஆவது ஆண்டு விழா

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டதன் 126 ஆவது ஆண்டு விழாவையொட்டி லோயா் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு பெரியாா் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் ஞாயிற்று
லோயா் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை, மாலை அணிவித்த பெரியாா் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா்.
லோயா் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை, மாலை அணிவித்த பெரியாா் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டதன் 126 ஆவது ஆண்டு விழாவையொட்டி லோயா் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு பெரியாா் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை, மாலை அணிவித்தனா்.

அணையிலிருந்து கடந்த 10.10.1885 ஆம் ஆண்டு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முதல்முறையாக தண்ணீா் திறந்து விடப்பட்டது.

அதன் 126 ஆண்டு விழாவையொட்டி, லோயா்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள கா்னல் ஜான் பென்னிகுவிக்கின் வெண்கலச் சிலைக்கு, பெரியாறு வைகை பாசன 5 மாநில பொதுச் செயலாளா் பொன்.காட்சிக்கண்ணன், ஒருங்கிணைப்பாளா் ச.அன்வா் பாலசிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com