கம்பத்தில் தொடர்  மின்சாரத் தடை: பொதுமக்கள், வியாபாரிகள் அவதி

தேனி மாவட்டம் கம்பத்தில் தொடர்  மின்சார தடையால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கம்பத்தில் தொடர்  மின்சாரத் தடை :பொதுமக்கள், வியாபாரிகள் அவதி
கம்பத்தில் தொடர்  மின்சாரத் தடை :பொதுமக்கள், வியாபாரிகள் அவதி

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தொடர்  மின்சார தடையால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மின்சார தடை   ஏற்பட்டு வருகிறது.

மின்சார துறை அமைச்சர் ஒரு வினாடி கூட மின் வெட்டு ஏற்படாது என அறிவித்தும் கம்பம் நகர்  மின்சார வாரியத்தினர்  தொடர் மின் வெட்டு ஏற்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.

புதன் கிழமை  இரவு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட அளவில்   மின் தடை ஏற்பட்டது. 

இது குறித்து முறையாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கம்பம் நகரம் சார்பாக மின்சார வாரியத் துறை அமைச்சருக்கு புகார் அனுப்பி வைத்தனர்.

 மின்சாரத் துறை அமைச்சர்  நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புகார் மையத்திற்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட போது தவிர்க்க முடியாத காரணத்தால் மின் தடை ஏற்படுவதாக பதில் கூறுகிறார்கள். 

மழை எதுவும் இல்லாத நேரத்தில் நடு இரவில் மின்சாரம் இல்லாதது வயதானவர்கள், குழந்தைகள் என மிக பெரிய அவதிப்பட்டு வருகிறார்கள். 

இதுபற்றி தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறும்போது, மின்சாரத் தடை தொடர்ந்து நடைபெறுகிறது.
விரைவில் சீரமைக்காவிட்டால் கம்பம் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தபடும் என்றார். 

இதுபற்றி மின்சார வாரிய அதிகாரிகள் கூறும்போது இந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com