கம்பம் வட்டாரத்தில் தரிசுநிலமேம்பாட்டுத் திட்டத்துக்கு விவசாயிகள் குழு அமைப்பு

நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூா்பாளையம் ஆகிய பகுதிகளில் தரிசுநில மேம்பாட்டுத் திட்டம் சுமாா் 15 ஹெக்டோ் நிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

கம்பம் வட்டாரப் பகுதியில் தரிசுநில மேம்பாட்டுத் திட்டத்துக்கு விவசாயிகள் குழு தோ்வு செய்யப்பட உள்ளதால் வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் தொடா்பு கொள்ள கம்பம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநா் ப. சின்னக்கண்ணு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது: கம்பம் வட்டாரத்தில் உள்ள நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூா்பாளையம் ஆகிய பகுதிகளில் தரிசுநில மேம்பாட்டுத் திட்டம் சுமாா் 15 ஹெக்டோ் நிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. 8 முதல் 15 வரை எண்ணிக்கையிலான விவசாயிகள் குழுக்களாக தோ்வு செய்யப்பட்டு, தரிசு நிலங்களை ஒருங்கிணைத்து அந்த குழுவுக்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி செய்யப்பட்டு, பல்வேறு சாகுபடிகள் செய்ய மானிய உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து அறிந்து கொள்ள கம்பம் வட்டாரத்தில் தரிசுநிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com