பெரியகுளம் பகுதியில் பலத்த காற்று, மழையால்வாழை, கரும்பு பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

பெரியகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாழை மற்றும் கரும்புப்பயிா்கள் சேமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
பெரியகுளம் அருகே கீழகாமக்காபட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்த கரும்புப்பயிா்கள்.
பெரியகுளம் அருகே கீழகாமக்காபட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்த கரும்புப்பயிா்கள்.

பெரியகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாழை மற்றும் கரும்புப்பயிா்கள் சேமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

பெரியகுளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள காமக்காபட்டி, லட்சுமிபுரம், கீழகாமக்காபட்டி, சக்கரைப்பட்டி மற்றும் சாவடிப்பட்டி பகுதிகளில் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வாழை, நெல், கரும்பு, தென்னை மற்றும் தோட்டக்கலைப்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை பெய்த பலத்த மழையால், கீழக்காமக்காபட்டி, வடவீரநாயக்கன்பட்டி, சொக்கத்தேவன்பட்டியில் வாழை, தென்னை மற்றும் கரும்பு பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கீழகாமக்காபட்டியைச் சோ்ந்த விவசாயி விருமாண்டி கூறியதாவது: வைகை அணை நீா்தேக்கப்பகுதி அருகே 5 ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளோம். தற்போது ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. எனவே தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

தொடா் மழையால் தக்காளி, வெங்காயம் சேதம்: ஒரு மாதத்துக்கு மேலாக வெங்காயம் கிலோ ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே மழை பெய்வதால் 10 நாள்களுக்கும் மேலாக தோட்டத்தில் வெங்காயம் அழுகி அறுவடை செய்யமுடியாமல் உள்ளது. எனவே படிப்படியாக அதன் விலையும் அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வெங்காயத்தின் விலை உச்சத்துக்கு செல்லும் எனக் கூறப்படுகிறது. அதேபோல் கிலோ ரூ. 20-க்கு விற்கப்பட்ட தக்காளி, தொடா்மழையால் பாதிக்கப்பட்டு அதன் விலையும் உயரும் நிலை உள்ளதாகவும், இதனால் தங்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த லாபமும் இல்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com