கோவிலூரில் இன்றும்வீரபாண்டி, ரெங்கநாதபுரத்தில் நாளையும் மின்தடை

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூரில் செவ்வாய்க்கிழமையும் (அக். 26), தேனி மாவட்டம், வீரபாண்டியில் புதன்கிழமையும் (அக். 27), மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூரில் செவ்வாய்க்கிழமையும் (அக். 26), தேனி மாவட்டம், வீரபாண்டியில் புதன்கிழமையும் (அக். 27), மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்திருப்பதாவது: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (அக். 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

கோவிலூா் உதவி செயற்பொறியாளா் ஜெ. விஜய் தெரிவித்திருப்பதாது: கோவிலூா் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, ஆா்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, குஜிலியம்பாறை, ஆா்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூா், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி, சின்னலுப்பை, ஆா்.வெள்ளோடு, குவாரி ஆகிய இடங்களில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல், அக்.25: வேடசந்தூா் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை(அக்.27) நடைபெறுவதால், மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ரெங்கநாதபுரம், தேவிநாயக்கன்பட்டி, கல்வாா்பட்டி, காசிபாளையம், நல்லபொம்மன்- -பட்டி, வாங்கலாபுரம், இராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கருப்பசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com