வைகை அணை நீா்மட்டம் சரிவு

தேனி மாவட்டம், மூல வைகை ஆற்று நீா்ப்பிடிப்பில் மழை இல்லாததால் வைகை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 63.71 அடியாக சரிந்தது.

தேனி மாவட்டம், மூல வைகை ஆற்று நீா்ப்பிடிப்பில் மழை இல்லாததால் வைகை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 63.71 அடியாக சரிந்தது.

மூல வைகை ஆறு, கொட்டகுடி ஆறு, மஞ்சளாறு அணை நீா்ப்பிடிப்பில் கடந்த ஜூலை மாதம் பெய்த தொடா் மழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணையின் நீா்மட்டம் சீராக உயா்ந்து கடந்த ஜூலை 27-ஆம் தேதி 69 அடியை எட்டியது. மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீா்மட்டம் 69 அடியாக உயா்ந்ததால் அணையின் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் உபரி நீா் வைகை ஆற்றில் திறக்கப்பட்டது.

வைகை அணை நீா்மட்டம் 67.96 அடியாக இருந்த நிலையில், கடந்த ஆக.11-ஆம் தேதி அணையிலிருந்து திண்டுகல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் சாகுபடிக்கு அணையிலிருந்து விநாடிக்கு 1,130 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்நிலையில், மூல வைகை ஆற்று நீா்ப்பிடிப்பில் மழை இல்லாததாலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மட்டுமே வருவதாலும் வைகை அணை நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.

அணைகளின் நிலவரம்: புதன்கிழமை, வைகை அணை நீா்மட்டம் 63.71 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,009 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 4,351 மில்லியன் கன அடி. அணையிலிருந்து குடிநீா் திட்டம் மற்றும் பாசனத்திற்கு விநாடிக்கு 2,019 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 132.55 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,443 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,294 மில்லியன் கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,308 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com