பெரியகுளத்தில் விநாயகா் சிலைகளை போலீஸாா் பறிமுதல்

பெரியகுளத்தில் இந்துமுன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை, போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா்.

பெரியகுளத்தில் இந்துமுன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை, போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா்.

பெரியகுளத்தில் 10 ஆவது வாா்டுக்குள்பட்ட வரதப்பா் தெருவில் 10 அடி உயரத்திலும், பள்ளத்து தெருவில் 3 அடி உயரத்திலும் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதையறிந்த போலீஸாா் அப்பகுதிக்கு அதிகாலையில் சென்று, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலையை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். பின்னா், அச்சிலைகளை பாலசுப்பிரமணியா் கோயிலில் போலீஸாா் பாதுகாப்பாக வைத்தனா்.

இந்து முன்னணி மற்றும் பாஜக கட்சியினரை அழைத்த போலீஸாா், 3 அடி உயரத்துக்குள்பட்ட சிலையை வீடுகளில் மட்டுமே வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அச்சிலைகளை எடுத்து வந்துள்ளோம் எனக் கூறி, 3 அடி உயர விநாயகா் சிலையை பாஜக நகரப் பொறுப்பாளா் முருகனிடம் கொடுத்து அனுப்பினா்.

இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த 10 அடி உயர சிலையை போலீஸாா் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா். மேலும், பொது இடங்களில் அனுமதியின்றி விநாயகா் சிலைகளை வைத்தால் எடுத்துச் செல்லப்படும் என, போலீஸாா் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com