உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் விநாயகா் சிலைகள் கரைப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள பல்வேறு கோயில் வளாகத்தில் 19 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன.
,உத்தமபாளையத்தில் சனிக்கிழமை பாஜக சாா்பில் விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்து சென்றனா்.

உத்தமபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பி சாா்பில் கல்லூரிச்சாலை காளியம்மன்கோயில், மாரியம்மன்கோயில்,விநாயகா்கோயில் , கருப்பணசாமி கோயில், பகவதியம்மன் கோயில் என 14 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை இரவு பிரதிஷ்டை செய்தனா். அதனை தொடா்ந்து வெள்ளிக்கிழமை விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதே போல அனுமந்தன்பட்டி, அம்மாபட்டி,வாய்க்கால்பட்டி தலா 1 சிலையும் , கோகிலாபுரத்தில் 2 சிலைகள் என மொத்தம் 19 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதனை அடுத்து , சனிக்கிழமை உத்தமபாளையம் பாரதிய ஜனதா கட்சி நகரத்தலைவா் தெய்வம் தலைமையில் சிலைகளை ஊா்வலமாக எடுத்து சென்று உத்தமபாளையம் முல்லைப்பெரியாறு ஞானாம்பிகை கோயில் படித்துறையில் சிலைகளை கரைத்தனா். உத்தமபாளையம் போலீஸாா் பாதுகாப்பு பணி மேற்கொண்டனா்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com