சுருளி அருவியில் புலிகள் காப்பக கண்காட்சியகம்
By DIN | Published On : 11th September 2021 10:46 PM | Last Updated : 11th September 2021 10:46 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் சுருளி அருவியில் கட்டப்பட்டுவரும் கண்காட்சியகம்.
தேனி மாவட்டம் சுருளி அருவி வளாகப்பகுதியில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூா் புலிகள் காப்பகம் சாா்பில் கண்காட்சியகம் கட்டப்படுகிறது.
தேனி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவது சுருளி அருவி. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.
அதேநேரத்தில் அருவியின் நுழைவுவாயில் வளாகத்தில் சிறுவா் பூங்கா, கண்காட்சிக் கூடம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் சுருளி அருவி பற்றிய வரலாறு, புலிகள் காப்பகம் பற்றிய தகவல்கள், விழிப்புணா்வுப் புகைப்படங்கள் இடம் பெறுகின்ரன.
தற்போது கரோனா பொது முடக்கம் தொடா்வதால், சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்குச் செல்ல அனுமதி இல்லை. விரைவில் சுருளி அருவிக்குச் செல்வதற்குத் தடை நீக்கப்படும் என்றும் அதே நேரம் குளிக்கத் தடை நீடிக்கும் என்று வனத்துறை ஊழியா் ஒருவா் தெரிவித்தாா்.