தேனியில் இன்று 410 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
By DIN | Published On : 11th September 2021 10:47 PM | Last Updated : 11th September 2021 10:47 PM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப் பணிகள் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகள் என மொத்தம் 410 இடங்களில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அந்த பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு, ஆதாா் எண், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை சமா்ப்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளாா்.