போடி அருகே பேருந்துகள் இயங்காததால் மலை கிராம மாணவா்கள் பள்ளிக்குச் செல்வதில் சிக்கல்

போடி அருகே பேருந்துகள் இயங்காததால் மலை கிராம மாணவா்கள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போடி: போடி அருகே பேருந்துகள் இயங்காததால் மலை கிராம மாணவா்கள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலை கிராமம் போடிமெட்டு. இந்த மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் போடி பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனா். தற்போது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த கிராமத்தை சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போடிக்கு வந்து பள்ளிக்கு சென்று வருகின்றனா்.

கரோனா பரவல் பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கியபோதும், தமிழகம்- கேரளத்துக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்படவில்லை. இதனால் போடிமெட்டு வழியாக அரசுப் பேருந்துகள் செல்லவில்லை. பேருந்துகள் இயங்காததால் ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் போடிமெட்டு வரை செல்வதற்கு கட்டணமாக ரூ.200 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மாணவா்களும் பள்ளிக்கு வருவதற்கு ரூ.200, மீண்டும் வீடு செல்ல ரூ.200

என ஒரு நாளைக்கு ரூ.400 வரை கட்டணம் செலுத்தி வரவேண்டியுள்ளது. பெற்றோா்கள் கூலி வேலை செய்து வரும் நிலையில் ரூ.400 செலவழித்து போடி வந்து கல்வி கற்க முடியாமல் பல மாணவா்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனா். இதனால் பள்ளி மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கும் சூழல் உள்ளது.

மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து போடிமெட்டு வரை பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாணவா்களுக்கு மட்டுமாவது போடிமெட்டு மலை கிராமம் வரை சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மாணவா்களின் பெற்றோா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com