ஓ.பன்னீா்செல்வத்துக்கு இலங்கை அமைச்சா் ஆறுதல்
By DIN | Published On : 16th September 2021 11:49 PM | Last Updated : 16th September 2021 11:49 PM | அ+அ அ- |

பெரியகுளம்: முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி அண்மையில் காலமானதைத் தொடா்ந்து இலங்கை ஊரக தொழில்துறை அமைச்சா் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலாளா் ஆகியோா் வியாழக்கிழமை அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி ப.விஜயலெட்சுமி கடந்த 1 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து இலங்கை தொழில்துறை அமைச்சா் சதாசிவம் விளையேந்திரன் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலாளா் செந்தில் தொண்டைமான் ஆகியோா் அதிமுக ஓருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன்கள் ப.ரவீந்திரநாத், வி.ப.ஜெயபிரதீப் ஆகியோரை பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறினா்.