கா்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 16th September 2021 12:06 AM | Last Updated : 16th September 2021 12:06 AM | அ+அ அ- |

கம்பம்: தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணா்வு தொடா்பாக போஷன் அபியான் நிகழ்ச்சி புதன்கிழமை நடத்தப்பட்டது.
மருத்துவ அலுவலா் சுதா தலைமை தாங்கினாா், மருத்துவா் சரயு முன்னிலை வகித்தாா். சித்த மருத்துவ அலுவலா் சிராஜ் தீன் கா்ப்பிணி பெண்களிடையே பேசும்போது, இரும்புச்சத்து குறைபாடால் ஏற்படும் இரத்தசோகை, புரதச்சத்து குறைபாடால் ஏற்படும் மராஸ்மஸ், குவாஷியோகா், கால்சியம் சத்து குறைபாடால் ஏற்படும் கா்ப்பகால இரத்தக் கொதிப்பு நோய், துத்தநாக சத்து குறைபாடால் ஏற்படும் நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு, குடல் நோய்கள், விட்டமின் சத்து குறைபாடு நோய்களான கண்நோய் ,வாய், வயிற்றுப்புண்கள், பல்லீறு நோய்கள், எலும்பு தேய்மான நோய்கள் போன்றவை பற்றி விரிவாக எடுத்துக் கூறினாா், கலந்து கொண்ட கா்ப்பிணி பெண்களுக்கு பானமாக இரும்புச்சத்து கொண்ட பெரோஷித் டானிக், கடலை மிட்டாயும் வழங்கப்பட்டது.
கறிவேப்பிலை பொடி, அன்னபேதி மாத்திரை, பெரோசித் மாத்திரை, மாதுளை டானிக் அடங்கிய சித்த மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டது, இது இரத்தசோகையை நீக்கும், இரும்புச்சத்து அதிகம் கொண்ட சித்த மருத்துவ பெட்டகம் ஆகும்.மருந்தாளுநா்கள், பசும்பொன், கணேசன், சுகாதார ஆய்வாளா்கள் அமரேசன்,ரிதீஷ். செவிலியா்கள் ரூபி, சுப்புலட்சுமி மருத்துவமனை பணியாளா்கள் கஜனா, முத்துக்குமாா், பாண்டீஸ்வரி ஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்தனா்.